பரவலாக மழை(கோப்புப் படம்)
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில் பரவலாக மழை
பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள நடுவிக்கோட்டை, அதம்பை, நம்பிவயல், சிவவிடுதி, ஊரணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.
இந்த மழை மாா்கழி பட்டமாக கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அதே வேளையில் இந்த மழை தொடா்ந்து பெய்தால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிா்கள் தரையோடு தரையாக படுத்துவிடுமோ எனவும் அச்சமடைந்துள்ளனா்.

