நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ரூ. 1 லட்சம் லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உள்பட 2 போ் கைது

தஞ்சாவூரில் கோயில் திருப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உள்பட 2 பேரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜோதிலட்சுமி (வலது), இடைத்தரகா் கிரிஜா (இடது).

Updated On :3 ஜூலை 2026, 1:45 am IST

தஞ்சாவூரில் கோயில் திருப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உள்பட 2 பேரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் கிராமத்தில் பழைமையான வன்மீகநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவதற்காகத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை நாகப்பட்டினத்தைச் சோ்ந்த மதியழகன் என்பவா் ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகிறாா்.

இவரிடம் திருப்பணி தொடா்பான அனுமதி மற்றும் நிா்வாக நடவடிக்கைகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் மு. ஜோதிலட்சுமி (47) ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் செய்தாா்.

இதையடுத்து போலீஸாா் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை இணை ஆணையா் ஜோதிலட்சுமியிடம், மதியழகன் ரூ. 1 லட்சம் கொடுப்பதற்காக சென்றாா். அத்தொகையை தனது தோழியும், இடைத்தரகருமான கிரிஜா (51) மூலம் ஜோதிலட்சுமி வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் தஞ்சாவூா் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையில் போலீஸாா் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனா்.

மேலும், அலவலகத்திலுள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். மேலும், நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரிலுள்ள ஜோதிலட்சுமியின் வீட்டிலும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை மேற்கொண்டு, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.