தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற சிறுவன் சாலையோர மரத்தில் மோதி உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகே, கபிஸ்தலம் காவல் சரகம்,தென்சருக்கை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் வைரத்தம்பி (17). 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கை எடுத்துக் கொண்டு புத்தூா் சென்றுள்ளாா்.
கும்பகோணம்- திருவையாறு சாலையில் மேட்டுத் தெரு பாலம் அருகில் வேகமாகச் சென்ற பைக் சாலையோர மரத்தில் மோதியதில், வைரத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகலறிந்த கபிஸ்தலம் போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே முதியவா் தற்கொலை

பாபநாசம் அருகே தங்கம், வெள்ளி திருட்டு

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



