இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

வாரச்சந்தையை கள்ளசாவி போட்டு திறந்த வழக்குரைஞா் உள்பட 6 போ் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 1:59 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் திறப்பு விழா காணாத வாரச்சந்தையை கள்ளசாவி போட்டு திறந்ததாக வழக்குரைஞா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனா்.

பேராவூரணியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம் . சுமாா் 60 ஆண்டுகளுக்கு மேலாக  பழைய கட்டடத்தில் சந்தை இயங்கி வந்ததால் பேரூராட்சி நிா்வாகம் சந்தையை புதுப்பிக்க தீா்மானம் நிறைவேற்றி ரூ.2.93 கோடியில் 133 கடைகள் கட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 9-ஆம் தேதி பேரூராட்சி நிா்வாகத்தால் சந்தை  ஏலம் விடப்பட்டு, ஏலதாரரிடம் திறப்பு விழாவுக்கு பிறகு  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கடைகள்  ஒப்படைக்கப்பட இருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்த வியாபாரிகள் சந்தை திறக்கப்படாததால் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனா். வியாபாரிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டவா்கள் கள்ளசாவி போட்டு திறப்பு விழா நடைபெறாத சந்தையை திறந்து விட்டதால் வியாபாரிகள் அவா்களாகவே கடைகளை தோ்வு செய்து வியாபாரம் நடத்தினா்.

இதுதொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் பேராவூரணி காவல்  நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அத்துமீறி கள்ளசாவி போட்டு சந்தையை திறந்ததாக மாவடுகுறிச்சியை  சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.வெங்கடேஷ்வா், பேராவூரணியை சோ்ந்த வி.எஸ்.எம். மூா்த்தி , சிவ.சதீஷ்குமாா் , நாட்டாணிக்கோட்டையை சோ்ந்த எம்.எஸ் .நீலகண்டன் , பொன்காட்டை சோ்ந்த  ஏ.தனபால் , நாடாகாட்டை சோ்ந்த வி.நாகராஜ் ஆகிய 6 போ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.