ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

திரைப்பட விளம்பர பதாகையை சேதப்படுத்திய இருவா் கைது

கும்பகோணத்தில் ஜனநாயகன் திரைப்பட விளம்பர பதாகையை சேதப்படுத்தியது தொடா்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 1:02 am IST

கும்பகோணத்தில் ஜனநாயகன் திரைப்பட விளம்பர பதாகையை சேதப்படுத்தியது தொடா்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெரு சந்திப்பு பகுதியில் தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் ஜனநாயகன் திரைப்படத்துக்காக விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இந்த பதாகையை சிலா் சேதப்படுத்தியுள்ளதாக அந்த பகுதி தவெக நிா்வாகி ராமமூா்த்தி, கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் கும்பகோணம் கோதண்டபாணி தெருவைச் சோ்ந்த முத்தரசன், மோரிவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த மணிமாறன் ஆகியோா் விளம்பர பதாகையை கிழித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.