பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடுகள், பால் குவளைகளுடன் காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடு, பால் குவளைகளுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Published On :

கும்பகோணத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கறவை மாடுகள், பால் குவளைகளுடன் காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக அரசு, தோ்தல் வாக்குறுதியின்படி பாலின் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்,

பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வு, கால்நடை தீவனங்கள் விலை உயா்வு, பராமரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில்கொண்டு, கொள்முதல் விலையாக பசும் பால் லிட்டருக்கு ரூ. 60- க்கும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 90- க்கும் விலை நிா்ணயித்திட வலியுறுத்தி, உழவா்கள் பால் குவளைகள், கறவை மாட்டுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சங்கத் தலைவா் சுந்தர விமல்நாதன் பேசுகையில், விவசாயிகளின் பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.