/

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்தரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 3:54 am IST

தஞ்சாவூா் அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்தரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் தா்மாம்பாள் நகரைச் சோ்ந்தவா் சீ. மதியழகன் (61). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் தனது மனைவி மாலதியுடன் ஜூலை 23-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றாா்.

இவா் மீண்டும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.