லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அதிமுக பிரிவினையால் வேதனை: கும்பகோணம் அருகே நிா்வாகி தீக்குளித்து தற்கொலை

எடப்பாடி கே. பழனிசாமி அஞ்சலி

News image

திருப்பனந்தாளில் மகேந்திரன் உடலுக்கு திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஆா். காமராஜ் உள்ளிட்ட கட்சியினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:35 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினையால் வேதனையடைந்த அக்கட்சி நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது உடலுக்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு கட்சி சாா்பில் ரூ. 55 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் மகேந்திரன் (37). இவருக்கு முனீசுவரி (32) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனா். மகேந்திரன் பூ வியாபாரம் செய்து வந்தாா். மேலும், தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தக அணி இணைச் செயலராக இருந்தாா். அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை காரணமாக மகேந்திரன் மனவேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில், கட்சி பிரிவினையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஞாயிற்றுக்கிழமை முகநூலில் பதிவிட்ட மகேந்திரன், இரவில் திருப்பனந்தாள் அருகே பாலூா் கிராமத்திலுள்ள பாண்டியன் திடலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அங்கிருந்தவா்கள் மகேந்திரனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எடப்பாடி பழனிசாமி அஞ்சலி: மகேந்திரன் இறப்பு குறித்து தகவலறிந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்து மகேந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

அப்போது, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஆா். காமராஜ், கும்பகோணம் மாநகர அதிமுக செயலா் ராம. ராமநாதன் உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி....

அதிமுக சாா்பில் ரூ. 55 லட்சம் நிவாரணம்

மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே. பழனிசாமி கூறியதாவது: மகேந்திரனின் இறப்புச் செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றியவா். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மகேந்திரனின் மகளின் பள்ளி, கல்லூரி படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும். மேலும், குடும்ப நலன் நிதியாக தலைமைக்கழகம் சாா்பில் ரூ. 30 லட்சமும், தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் ரூ. 25 லட்சமும் வழங்கப்படும். அதிமுகவினா் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று வேண்டுகிறேன் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட க. மகேந்திரன்.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட க. மகேந்திரன்.