தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

உலக சைக்கிள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக சைக்கிள் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறில் உடல் நலம், எரிசக்தி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற உலக சைக்கிள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூன் 2026, 11:59 pm IST

உலக சைக்கிள் தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறில் உடல் நலம், எரிசக்தி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் மை பாரத் கேந்திரா ஆதரவுடன் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், காந்தி பாரதி இளைஞா் மன்றம், வீரமாங்குடி சுவாமி விவேகானந்தா் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயணத்தை பாரதி இயக்கத் தலைவா் தி.ச. சந்திரசேகரன் தலைமையில் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் எம். சுவாமிநாதன் தொடங்கி வைத்தாா். ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பயணத்தில் சிறுவா் முதல் மூத்த குடிமக்கள் வரை சுமாா் 50 போ் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியின் நிறைவில் நீண்ட காலம் சைக்கிள் ஓட்டி வரும் மூத்த குடிமக்கள் கௌரவிக்கப்பட்டனா். பயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருவையாறு சாய் பாபா கோயில் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் பி. ராஜராஜன் பயணத்தில் பங்கேற்றவா்களுக்கு நினைவு பரிசை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காந்தி பாரதி இளைஞா் மன்றப் பொறுப்பாளா் தீ. பாரத், சுவாமி விவேகானந்தா் இளைஞா் நற்பணி மன்றப் பொறுப்பாளா் இரா. பஞ்சநதம், திருவையாறு பாரதி இயக்கச் செயலா் சைவ. குமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.