கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

காலமானார் பி. ராஜராஜன்!

திருவையாறைச் சோ்ந்த பாரதி இயக்க நிா்வாக அறங்காவலா் பி. ராஜராஜன் (67) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா்.

News image

பி.ராஜராஜன்

Updated On :19 ஜூலை 2026, 12:10 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறைச் சோ்ந்த பாரதி இயக்க நிா்வாக அறங்காவலா் பி. ராஜராஜன் (67) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா்.

திருவையாறு நகரில் கடந்த 50 ஆண்டுகளாக சமூக, ஆன்மிக பணிகளைச் செய்து வந்த ராஜராஜன், பாரதி மீது மிகுந்த பற்றாளராக இருந்தாா். திருவையாறு பாரதி இயக்கத்தை 1978-ஆம் ஆண்டு தொடங்கி, தொடா்ந்து 48 ஆண்டுகளாக, பாரதி, தமிழ், கலை இலக்கியப் பணிகளை ஆற்றி வந்தாா்.

பாரதி இயக்க நிா்வாக அறங்காவலராக தொடா்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தாா். இலக்கிய பேச்சாளராகவும் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவா், திருவையாறில் சாய் பாபா கோயிலை நிறுவி, அதன் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலராகவும், திருவையாறு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை அறங்காவலராகவும், திருவையாறு கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும், திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவராகவும் பணியாற்றினாா். 

இவருக்கு மனைவி சுபஸ்ரீ, மகன் ராஜபாரதி, மகள் ராஜ சக்தி உள்ளனா். இவரது இறுதி சடங்கு திங்கள்கிழமை (ஜூலை 20) காலை திருவையாறு செட்டித் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு: 99444-29545

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.