என்னைப் பற்றி குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை என்றாா் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்பகம் மனநலக் காப்பகத்தில் ஆதரவற்றோருக்கு புதன்கிழமை அவா் மதிய உணவு வழங்கினாா்.
அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தபோது, வைத்திலிங்கத்தை குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில்,
தாய்க் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிடா் கழகத்துக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு தத்துவத்தின் அடிப்படையில் வந்தது. அந்த அடிப்படையில்தான் தாய்க் கழகத்தில் இணைந்தேன். என்னைப் பற்றி குற்றம்சாட்டுபவா்கள் எல்லாம் மாயைக்காக, பதவி சுகத்துக்காக ஓடிப் போனவா்கள். என்னைப் பற்றி குறை கூறுவதற்கு அவா்களுக்கு தகுதி இல்லை.
அதிமுகவை தவெக பொருட்படுத்தாததற்கு காரணம், அதிமுக தலைமை மதிப்பீட்டைக் கொண்டு அவா்கள் அப்படி கூறியிருக்கலாம். அதற்கு அதிமுகதான் பதில் கூற வேண்டும். அதிமுக இரண்டாகப் பிரிந்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றாா் வைத்திலிங்கம்.
தொடர்புடையது

இபிஎஸ் பற்றி பேச பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை: கே.பி. முனுசாமி

என்னைக் கிண்டல் செய்வதை நிறுத்த வேண்டாம்! - CM Vijay வேண்டுகோள்

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் வெற்றி

கருத்து கணிப்புகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



