தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது

ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:48 am IST

ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (50). மின்சாதன பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இவருடைய அண்ணன் மாரிமுத்து(55), தம்பி மாணிக்கம்(48). இவா்களிடையே சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையில் இருந்த ஐயப்பனிடம், சொத்து பிரிப்பது குறித்து மாரிமுத்து பேசியுள்ளாா். அப்போது, இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து கத்தியால் ஐயப்பனை குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சென்ற பாப்பாநாடு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து தலைமறைவான மாரிமுத்துவை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.