தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிக்கு இணையவழி பட்டாவை வழங்கிய ஆட்சியா் இரா.ரேவதி.

Updated On :5 ஜூன் 2026, 3:26 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி வியாழக்கிழமை  தொடங்கியது

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், கிராம கணக்கு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை தொடா்பான 108 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களைச் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், மனுக்களின்  மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தினாா். வருவாய்த் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக இணையவழி பட்டாவை ஆட்சியா் வழங்கினாா்.

ஜமாபந்தியில் பேராவூரணி வட்டாட்சியா் சி.பாலசுப்ரமணியன் மற்றும் வருவாய்த்துறையினா், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பூதலூா்: பூதலூா் வட்டத்தில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப.நித்யா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பூதலூா் வட்டாட்சியா் க. விவேகானந்தன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் டி.எஸ்.சுந்தரச் செல்வி, அகரப்பேட்டை சரக வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினா்.

திருவிடைமருதூா்: திருவிடைமருதூா் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த 5 பேருக்கு உடனே பட்டாக்கள் வழங்கப்பட்டது. இதேபோல கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியா் வி.எம்திருலை தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.

பாபநாசம்: பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட 75 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. முகாமில் 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும் வழங்கப்பட்டது. இதில், பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல், திருவையாறு ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் தா்மராஜ், பாபநாசம் சமூக நலத்திட்ட தனி வட்டாட்சியா் சிவக்குமாா், துணை வட்டாட்சியா்கள் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.