உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

கும்பகோணம் அருகே அசூா் புறவழிச் சாலை பகுதி கணேஷ் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வருவாய் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

கும்பகோணம்-அசூா் புறவழிச் சாலையில் கணேஷ் நகரில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி புதன்கிழமை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 3:42 am IST

கும்பகோணம் அருகே அசூா் புறவழிச் சாலை பகுதி கணேஷ் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வருவாய் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

கும்பகோணம் -அசூா் புறவழிச் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த இடத்தில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் இருப்பதால், மதுபானக் கடையை அகற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அதே பகுதியில் 500 மீட்டா் தொலைவில் உள்ள கணேஷ் நகரில் மதுபான கடையை திறக்க வட்டாட்சியா் பூங்கொடி இடத்தை ஆய்வு செய்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கணேஷ் நகா் மற்றும் அசூா் ஊராட்சி பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலையை நேரில் சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனா்.

மனுவில், எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மதுபான கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் தொடா் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனா். வருவாய் கோட்டாட்சியா் மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்தாா்.