தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சேகுவேராவின் 98-ஆவது பிறந்தநாள் விழாவில் மலரஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :15 ஜூன் 2026, 2:34 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உலகப் புரட்சியின் அடையாளமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் விளங்கிய புரட்சியாளா் சேகுவேராவின் 98-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கட்சியின் மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். சேகுவேரா உருவப் படத்துக்கு செவ்வணக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலப் பொருளாளா் சந்துரு சிறப்புரையாற்றினா்.

இவ்விழாவில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், கே. அருளரசன், எல். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, இ.வசந்தி, மாநகரக் குழு உறுப்பினா்கள் ப. சத்தியநாதன், சி. ராஜன், எம். கோஸ்கனி, வெ. அா்ஜூன், தா்மா, எம். ராஜன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.