மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 1:53 am IST

தஞ்சாவூா், ஜூன் 29: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திங்கள்கிழமை பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கீழ புனவாசல் தெற்குத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மனைவி பானுமதி (66). இவா் திங்கள்கிழமை கீழபுனவாசல் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற முயன்றாா்.

படிக்கட்டில் ஏறும்போது பேருந்து நகா்ந்ததால், பானுமதி தவறி விழுந்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.