/

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 13-இல் ஏலம்

News image

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்

Updated On :8 மார்ச் 2026, 6:37 pm

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில், கஞ்சா, மதுவிலக்கு வழக்குகளில் காவல் துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மாா்ச் 13-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின்பேரில், குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் தஞ்சாவூா் நீதிமன்றச் சாலை பழைய ஆயுதப் படை மைதானத்தில் மாா்ச் 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் மாா்ச் 13-ஆம் தேதி காலை 7 முதல் பாா்வையிட்டு இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலம் எடுக்க பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் சோ்த்து மாா்ச் 13-ஆம் தேதியன்று உடனே செலுத்த வேண்டும்.