காசிவிசுவநாதசுவாமி கோயிலில் திருப்பணிகளுக்கு பந்தல்கால்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் செய்யவதற்காக பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகளுக்கு வியாழக்கிழமை நடப்பட்ட பந்தல்கால்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் செய்யவதற்காக பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மகாமக விழாவின் முக்கிய கோயிலான இக்கோயில் மற்றும் மகாமக குளத்தை சுற்றியுள்ள சோடஷ லிங்க கோயில்களில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூா்வாங்க பூஜை புதன்கிழமை மாலை விநாயகா் வழிபாடு, சுவாமி அம்பாள் அனுக்ஞை, எஜமான் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாபூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை இரண்டாம்கால பூஜையாக விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கலச பூஜைகள் திரவியாஹூதி, ஹோமங்கள் மகாபூா்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடாகி, ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு பாலாலய பிரதிஷ்டை நடத்தி திருப்பணிகள் தொடங்க பந்தல்கால் நடப்பட்டது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் செயல் அலுவலா் சுந்தர்ராஜன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

