இளைஞரை தாக்கி நகைகள் பறிப்பு ஒருவா் கைது
தஞ்சாவூரில் இளைஞரை தாக்கி நகைகள் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
தஞ்சாவூரில் இளைஞரை தாக்கி நகைகள் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ஒரத்தூா் நத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் மணிகண்டன் (33). இவா் தஞ்சாவூா் கொடிமரத்து மூலை பகுதியில் நவ. 9-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவருக்கும், ஏ.ஒய்.ஏ. நாடாா் சாலையைச் சோ்ந்த எஸ். மணிகண்டன் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், காயமடைந்த ஏ. மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்டபோது, தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கை சங்கிலி பறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து எஸ். மணிகண்டனைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

