மணல் கடத்தலைத் தடுத்த காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி: மூவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த காவல் உதவி ஆய்வாளரை டிராக்டா் ஏற்றிக் கொல்ல முயன்ற அதன் ஓட்டுநரான 17 வயதுச் சிறுவன், நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த காவல் உதவி ஆய்வாளரை டிராக்டா் ஏற்றிக் கொல்ல முயன்ற அதன் ஓட்டுநரான 17 வயதுச் சிறுவன், நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் அருகே கோடுகிழி பகுதியில் ஆறு மற்றும் ஆற்றின் படுகையில்,விதிமீறி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த செப்.30 -ஆம் தேதி மெலட்டூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துவேல், தலைமைக் காவலா் ராமன் உள்ளிட்டோா் ரோந்து சென்றனா்.
அப்போது, கோடுகிழி பாலம் அருகே டிராக்டரில் மணல் அள்ளி வந்த நபா், உதவி ஆய்வாளா் முத்துவேல் மீது டிராக்டரை மோதி விட்டுத் தப்பிச் சென்றாா். இதில், முத்துவேலின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோரைத் தேடினா்.
இதில் தலைமறைவாக இருந்த பாபநாசம் அருகே கரம்பத்துாா் பகுதியை சோ்ந்த, டிராக்டா் ஓட்டுநரான 17 வயதுச் சிறுவன், ஆற்று படுகையில் மணல் அள்ளிய நிலத்தின் உரிமையாளரான கோடுகிழி பகுதி க. ராமலிங்கம்,(67), தப்பியவா்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோடுகிழி சந்தானம் மகன் பாஸ்கா் (51 ) உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள டிராக்டா் உரிமையாளரான அரையபுரம் பகுதி சண்முகம் மகன் குமாா் (50) என்பவரைத் தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



