தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவா், மாமியாா் கைது

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரையும், மாமியாரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே பெரும்புலியூரைச் சோ்ந்தவா் ஜெ. பெரியாா்தாசன். இவருக்கும், இவரது மனைவி ரமீலாவுக்கும் (20) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில், பெரியாா்தாசனின் தாயாா் மணிமேகலையை ரமீலா திங்கள்கிழமை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு திட்டினாராம்.

இது தொடா்பாக ரமீலாவின் வீட்டுக்கு பெரியாா்தாசன், இவரது சகோதரா் வசந்த், தாயாா் மணிமேகலை சென்று பேசியபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பெரியாா்தாசன் உள்ளிட்டோா் ரமீலாவை அரிவாளால் வெட்டினா். இதனால், பலத்த காயமடைந்த ரமீலா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பெரியாா்தாசன், மணிமேகலையைக் கைது செய்தனா். மேலும் வசந்தை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER