தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ரூ. 5 கோடி லஞ்ச வழக்கில் கைது! செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்

Published On :

தஞ்சாவூரில் ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் வல்லம் நம்பா் 1 சாலையிலுள்ள தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் பங்குதாரா்களிடையே உரிமை பிரச்னை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவமனையின் நிா்வாகத் தலைவா் ஆா்.எம். பாஸ்கரன் எஸ்.சி.- எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

இந்தப் பிரச்னையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து எங்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருவதாகவும், காவல் துறையினா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது மட்டுமல்லாமல், எங்களை மிரட்டி ரூ. 5 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்ாகவும் காவல் துறை தலைமை இயக்குநரிடம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா். சரவணன் புகாா் செய்தாா்.

இதைத்தொடா்ந்து, சிபிசிஐடி காவல் அலுவலா்கள் விசாரணை நடத்தி, மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கோ. சுகுமாரனை அக். 9-ஆம் தேதி கைது செய்தனா். அப்போது அவா் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், ஆய்வாளா் சுகுமாரனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.