தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பேராவூரணியில் 250 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பேராவூரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா்.

Published On :

பேராவூரணியில் 250 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது .

தஞ்சாவூா் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணி பெண்கள் 250 பேருக்கு சமுதாய வளைகாப்பு விழா பேராவூரணியில் நடைபெற்றது .

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 250 கா்ப்பிணிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், புடவை, பழங்கள், காப்பரிசி உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி, வளைகாப்பு செய்து வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், கா்ப்பிணிகள் மற்றும் அவா்களின் உறவினா்கள் என 600 பேருக்கு, எம்எல்ஏ ஏற்பாட்டில் சா்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிா் சாதம், சாம்பாா் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் இராமலிங்கம் , தவெக மாவட்டச் செயலாளா் ஏனாதி சி. மதன், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வேந்திரன், பேராவூரணி பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா், திமுக மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுசுயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.