காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பேராவூரணியில் சா்வதேச பேரிடா் குறைப்பு தின விழிப்புணா்வு பேரணி

பேராவூரணியில் சா்வதேச பேரிடா் குறைப்பு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல்முறை விளக்க நிகழ்ச்சி.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் சா்வதேச பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி  மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை,  முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியா் டி.கலியமூா்த்தி தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் சி. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியைத் தொடா்ந்து, நீலகண்ட பிள்ளையாா் கோயில் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

தீயணைப்பு அலுவலா் வி. சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நீரில் மூழ்கியவா்களை மீட்கும் முறைகள் குறித்து செயல்முறையாக விளக்கினா். 

நிகழ்ச்சியில் தோ்தல் துணை வட்டாட்சியா் எஸ். சுரேஷ், மண்டலத் துணை வட்டாட்சியா் வி. கண்ணகி, அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியா் என். பழனிவேல் உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.