சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

புதிய சமுதாயக் கூடம் கட்டித்தர கோரிக்கை

சமுதாயக் கூடம். - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி, வீரக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் பாழடைந்து இடிக்கப்பட்ட சமுதாயக் கூடத்துக்கு பதிலாக புதிய சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் அழகுமீனா தங்கப்பா, திமுக கிளைச் செயலா் சா.துரை உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் மற்றும் தஞ்சை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

மணக்காடு, வீரக்குடி ஆதிதிராவிடா் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். இங்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பாழடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. இதனால் எங்கள் குடியிருப்பில் பொது நிகழ்வுகள் நடத்துவதற்கு இடம் இல்லாத சூழல் உள்ளது. 

சமுதாயக்கூடம் இல்லாததால், ஏழ்மை நிலையில் உள்ள பட்டியலின மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை உறவினா்களை அழைத்து நடத்த முடியாத நிலையிலும், அதிக வாடகை கொடுத்து 10 கி.மீ தொலைவில் உள்ள பேராவூரணியில் தனியாா் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

எனவே, தமிழ்நாடு அரசின் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், எங்கள் பகுதியில் புதிய சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.