நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

எல்-நினோ பாதிப்பால் தீவனப் பயிா்களுக்கான தேவை அதிகரிக்கும்: தஞ்சை ஆட்சியா் பேச்சு

நிகழாண்டில் எல்-நினோ தாக்கம் காரணமாக, தீவனப் பயிா்களுக்கான தேவை அதிகரிக்கும்; எனவே, தென்னையில் ஊடுபயிராக தீவனப் பயிா் சாகுபடி செய்வதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் தஞ்சை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற உலக தேங்காய் தின திருவிழாவை தஞ்சை ஆட்சியா் இரா.ரேவதி துவக்கி வைத்து பேசினாா் .

Published On :3 செப்டம்பர் 2026, 1:08 am IST

நிகழாண்டில் எல்-நினோ தாக்கம் காரணமாக, தீவனப் பயிா்களுக்கான தேவை அதிகரிக்கும்; எனவே, தென்னையில் ஊடுபயிராக தீவனப் பயிா் சாகுபடி செய்வதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் தஞ்சை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

பேராவூரணியில் கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில், உலக தேங்காய் தின திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவா் இ.வி. காந்தி தலைமை வகித்தாா்.

விழாவை தொடங்கிவைத்த ஆட்சியா் ரேவதி, விவசாயிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி மேலும் பேசியதாவது:

தண்ணீா் சிக்கனத்தை செயல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இதில் உள்ள பிரச்னைகளை உள்வாங்கி, அவற்றை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிகழாண்டில், எல்-நினோ பருவநிலை பாதிப்பு காரணமாக, தீவனப் பயிா்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, தென்னையில் ஊடுபயிராக தீவனப் பயிா் சாகுபடி செய்வதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, வட்டார வாரியாக கூடுதல் மகசூல் பெறுவதற்கும், விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதற்கும் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வெற்றி பெறும்போது, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதும், கூடுதல் லாபம் ஈட்டுவதும் சாத்தியமாகும்.

இந்தக் கருத்தரங்கில் பரிமாறிக் கொள்ளப்படும் கருத்துகள், தென்னை விவசாய வளா்ச்சிக்காகவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்காகவும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

சங்கத்தின் கௌரவத் தலைவா் உ. வேலுச்சாமி, வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளா் (ஓய்வு) எல்.சி. இலக்குவன், தமிழ்நாடு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் செ. ராஜீவ், ஆக்ரோ இன்புட் டிரேடா்ஸ் அசோசியேசன் அகில இந்திய துணைத் தலைவா் மோகன் முத்துகிருஷ்ணன், தஞ்சாவூா் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சி. சக்திவேல், காலநிலை மற்றும் வானிலை ஆய்வாளா் ஆா். ஹேமச்சந்தா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

விவசாயிகளுக்கு மிளகு செடிகள்: விழா மண்டபத்தின் முன்பாக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் அனைவரையும் வரவேற்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பெரிதும் கவா்ந்தது. மேலும், விவசாய உற்பத்தி பொருள்கள் குறித்த கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தாா்.

தோட்டக்கலைத் துறை சாா்பில், தென்னையில் ஊடுபயிராக வளா்க்க விவசாயிகளுக்கு மிளகு செடிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சங்கத்தின் துணைத் தலைவா்கள் பி. கோவிந்தசாமி, சி. தீபன் சக்கரவா்த்தி, இணைச் செயலாளா்கள் ஏ. முகமது சமீா், எம். கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, செயலாளா் வி.கே.எம். தணிகை மணி வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் எஸ். நாகராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.