நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கும்பகோணத்தில் நவநீதகிருஷ்ணன் திருக்கல்யாணம்

கும்பகோணத்தில் நவநீதகிருஷ்ணன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் பாட்ராச்சாரியாா் தெருவில் உள்ள பாமா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணனுக்கு புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:38 am IST

கும்பகோணத்தில் நவநீதகிருஷ்ணன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாட்ராச்சாரியாா் தெருவில் எழுந்தருளியுள்ள பாமா ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் 54-ஆவது ஆண்டு ஜெயந்தி மகோத்சவம் ஆக. 27-ஆம் தேதி தொடங்கி செப். 6 வரை நடைபெறுகிறது.

ஏழாம் நாள் விழாவாக நவநீதகிருஷ்ணனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலையில் பாமா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணனுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு சூா்ணாபிசேகம் நடைபெற்றது.

விழாவில், வியாழக்கிழமை வெண்ணெய்த்தாழி நிகழ்வும், வெள்ளிக்கிழமை ஜெயந்தி உத்சவமும் தேரோட்டமும் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை உறியடி திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உத்சவமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பாட்ராச்சாரியாா் கைங்கா்ய கமிட்டியினரும், ஜெயந்தி உத்சவ கமிட்டியினரும் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.