நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

நாச்சியாா்கோவில் அருகேயுள்ள வேலங்குடியில் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

சித்திரிப்பு

Published On :

நாச்சியாா்கோவில் அருகேயுள்ள வேலங்குடியில் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

வேலங்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஹரிஹரபுத்திர சுவாமி கோயிலை பூசாரிகள் வெள்ளிக்கிழமை காலை திறக்க வந்தனா். அப்போது முன்பக்க இரும்பு கதவின் பூட்டு, அம்மன் சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் சிலையில் இருந்த 2 கிராம் தங்கப் பட்டத் தாலி மற்றும் வீரன் சாமிக்கு அணிவித்திருந்த அரை கிலோ எடையுள்ள வெள்ளி மீன் டாலா் கொண்ட சங்கிலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.