தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம், வெள்ளி கொலுசு திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருடப்பட்டது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருடப்பட்டது.

நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி சின்னதாய் வட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் குமரேசன்(30). இவரது மனைவி தேவி சத்யபாமா(28). குமரேசன் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குமரேசன் பெங்களூருக்கும், அவரது மனைவி தேவி சத்யபாமா தனது குழந்தையுடன் முத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றனா்.

திங்கள்கிழமை தேவி சத்யபாமா திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி கொலுசு 1 ஜோடி ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.