கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளிக்கும் என்றார் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்.
திருச்சியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் இளைஞரணி கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறஉள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் குறித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான 22 கட்சிகள் கொண்ட கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது முடிவு செய்துள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுகவுடன் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அளவிலானஇளைஞரணி மாநாட்டை கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் ஜூலை மாதம் நடத்துவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது, திருச்சியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நடைபெற்றன. கூட்டத்துக்கு இளைஞரணியின் தேசியப் பொதுச் செயலர் சுபைர் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர், முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான எம்.அப்துல் ரகுமான், திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ. முகமது நிஜாம், செயலர் கே.எம்.கே. ஹபீபுர் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இளைஞரணியின் புதிய மாநிலத் தலைவராக முகமது யூனுஸ், பொதுச் செயலராக அன்சாரி மதார், பொருளாளராக அபு பாரீஸ், துணைத் தலைவர்களாக முகமது அபிபுல்லா, செய்யது பட்டாணி, முஸ்தாக் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

