திருச்சியில் சனிக்கிழமை நடந்த சாலைவிபத்தில் உணவக தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் திரவியராஜ் (52). உணவக தொழிலாளி. இவர் சனிக்கிழமை மாலை செந்தண்ணீர்புரத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சென்னை-மதுரை பிரதான சாலையில் செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு நகரப்பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த திரவியராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK






