திருச்சியில் கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52) கட்டடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதி சின்னச்செட்டித் தெருவைச் சேர்ந்த உஷாராணி என்ற விதவைப் பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவரது நடத்தையில் பாஸ்கருக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். சனிக்கிழமை காலை கடைவீதியில் உஷாராணி வேறொரு நபருடன் பேசிக்கொண்டு நின்றுள்ளார். இதையடுத்து அன்றிரவு உஷாராணியின் வீட்டுக்குச் சென்ற பாஸ்கர், உஷாராணியிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாஸ்கர் கத்தியை எடுத்து உஷாராணியின் உடலில் கீறியதுடன் கையில் குத்தியுள்ளார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த உஷாராணி கொடுத்த புகாரின் பேரில், உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


