நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

10-ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவி தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் திருச்சியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் திருச்சியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, தென்னூரை அடுத்த சேஷசாயிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரத்தினவள்ளி. இவர்களது மகள் விஜயலட்சுமி (16). 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். கணவர் இறந்த பிறகு, வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த ரத்தினவள்ளி, தனது மகளை படிப்பில் கவனம் செலுத்தவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஊக்குவித்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 500-க்கு 446 மதிப்பெண் பெற்றிருந்தார். இதையடுத்து, தனது தாய் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண் பெறவில்லையே என்ற விரக்தியில் இருந்த விஜயலட்சுமி, புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக, தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.