வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

புரட்டாசி சனிக்கிழமைகளில்  பெருமாள்மலைக்கு  இரு சக்கர வாகனத்தில் செல்லத் தடை

பெருமாள்மலையில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழாவின் போது இரு சக்கர வாகனத்தில் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published On :

பெருமாள்மலையில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழாவின் போது இரு சக்கர வாகனத்தில் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் நடைபெறும் உற்சவ விழா தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் துறையூரில் வட்டாட்சியர் பு.ரவிசங்கர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கடை ஒப்பந்தாரர்கள், சுற்றுலா வேன் உரிமையாளர், ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் இரு சக்கர வாகனத்தில் மலையேற, நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது, மேலும் சுற்றுலா வேனில் மலையேற ரூ.30, இறங்க ரூ.20 கட்டணம் நிர்ணயம் செய்தும், ஒரு நடைக்கு 12 பக்தர்களை மட்டுமே வேனில் ஏற்றிச் செல்ல வேன் ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 
சனிக்கிழமைகளில் மின்தடை செய்யக்கூடாது. சுத்தமான குடிநீர், கழிவறை பராமரிப்பை ஒன்றிய, நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். துறையூரிலிருந்து பெருமாள்மலை அடிவாரத்துக்கு போதுமான அளவில் பேருந்து வசதி செய்ய வேண்டும். மொட்டையடிக்கும் பணியாளர்கள் மது அருந்தி பணியில் ஈடுபடுவதையும்,  கோயிலுக்குள் கடை அமைப்பதை அறநிலைத்துறையினர் தடை செய்யவேண்டும். அன்னதானம் செய்வோர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.