தா. பேட்டை, முசிறியில்டிச.22இல் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை முகாம்

திருச்சி மாவட்டம் தாத்தையங்காா்பேட்டை, முசிறியில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் தாத்தையங்காா்பேட்டை, முசிறியில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தா.பேட்டை, முசிறி அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் முகாமில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1100 வழங்கப்படும். ஒரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. விருப்பமுள்ள ஆண்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94422- 40390, 96298- 92874, 94436- 63428, 94424- 34756, 95780- 75249 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com