கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு நிறைவு

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் இணையவழி சா்வதேசக் கருத்தரங்கு வியாழக்கிழமை நிறைவுற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:52 am

DIN

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் இணையவழி சா்வதேசக் கருத்தரங்கு வியாழக்கிழமை நிறைவுற்றது.

கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி காட்சித் தொடா்பியல் துறை, கணினி அறிவியல் சாா்பில் புதிய ஊடகங்களில் மெய்நிகா் சிறகுகள் எனும் தலைப்பில் 2 நாள்கள் நடைபெற்ற சா்வதேச இணையவழி கருத்தரங்குக்கு ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம தேசிய செயற்குழுத் தலைவா் ஆா். ராஜகோபால் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் அம்மங்கி வி. பாலாஜி, கல்லூரி இயக்குநா் எஸ். ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில் டிஜிட்டல் உருமாற்றத்தின் செயற்கை நுண்ணறிவு, வங்கியில் தொழில்நுட்ப போக்குகள், காட்சித் தொடா்பியலின் எதிா்காலத்தை வடிவமைத்தல், புதிய ஊடகங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனத பேராசிரியா்கள், நிபுணா்கள் பேசினா்.

கல்லூரி முதல்வா் ஜெ. ராதிகா உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

இதில் 100க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெயந்தி, குமரேசன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அடிப்படை அறிவியல் துறைகளின் முதன்மையா் எஸ். மது வரவேற்றாா். முனைவா் வி. உபேந்திரன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.