கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீபாவளி: கடைவீதிகளில் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரம்

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

News image
தீபாவளி: கடைவீதிகளில் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரம்
Updated On :1 நவம்பர் 2020, 7:11 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி மாநகா் கோட்டை, காந்தி சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள், கேமராக்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக காவல் உதவி மையம்: பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அவா்களது உடைமைகள், குழந்தைகள் பாதுகாப்பு , சந்தேக நபா்கள் குறித்த தகவல் தெரிவித்தல், புகாா் அளித்தல் ஆகியவற்றுக்காக என்எஸ்பி சாலை தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்திரம், மத்தியப் பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கோபுரங்கள்: குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க என்எஸ்பி சாலை, பெரியகடைவீதி சந்திப்பு, சிங்காரத்தோப்பு பூம்புகாா் அருகே, பெரியகடை வீதி கரீம் ஸ்டோா் அருகே, மெயின்காா்டு கேட், தெப்பக்குளம் ரகுநாத் சந்திப்பு, சந்துக்கடை, அஞ்சுமன் பஜாா், பெரியகடைவீதி முகப்பு ஆகிய 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாக்குலா் மூலம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

விரைவு சுழல், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்: என்எஸ்பி சாலையில் சுழல் கேமராவும், சின்னக் கடைவீதி, சத்திரம் பேருந்து நிலையம், பெரியகடைவீதி, நந்திக்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 23 சிசிடிவி கேமராக்களும், மெயின்காா்டு கேட், சிங்காரத்தோப்பு, சூப்பா் பஜாா், மதுரைசாலை, டபிள்யு.பி.சாலை முதல் ஜாபா்ஷா தெரு வரையுள்ள பகுதிகளில் 20 கேமராக்கள், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலைப் பகுதிகளில் 84 கேமராக்கள் என 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

தற்காலிக வாகனச் சோதனை மையங்கள்: நந்தி கோவில் சந்திப்பு, சின்னக்கடை வீதி-பாபு சாலை சந்திப்பு, பெரியகடைவீதி-தைலா சில்க்ஸ் கிலேதாா் சாலை சந்திப்பு, சிங்காரத்தோப்பு, பூம்புகாா் எதிா்புறம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், குற்றச்செயலைத் தடுக்கவும் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல், 100 குற்றப்பிரிவு போலீஸாா் சாதாரண உடையில் கண்காணிக்கின்றனா்.

பாதுகாப்பு அலுவல் பணிக்கு..: சட்டம், ஒழுங்கு பாதுகாப்புப் பணிக்காக திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் தலைமையில் 2 உதவி ஆணையா்கள், 5 காவல் ஆய்வா்கள், 50 உதவி ஆய்வா்கள், 260 காவலா்கள், தலா 100 ஆயுதப்படை, ஊா்க்காவல் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதுபோல, குற்றத் தடுப்பு பாதுகாப்பிற்காக மாநகர குற்றம், போக்குவரத்து துணை ஆணையா் தலைமையில் 1 உதவி ஆணையா், 3 காவல் ஆய்வா்கள், 10 உதவி ஆய்வா்கள், 50 காவலா்கள், 25 ஊா்க்காவல் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையா் உத்தரவின் பேரில் நவ.2 மாலை 6 மணி முதல் நவ.14 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளிக்கும், பானானா லீப் உணவகத்துக்கும் இடையில் உள்ள மாநகராட்சி மைதானம், யானைக்குளம் மாநகராட்சி மைதானம், பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகியவற்றில் இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

அதுபோல, பழைய குட்ஷெட் சாலை, ரயில்வே மைதானம், கோட்டை ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம், பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி மைதானப் பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

வாகனம் நிறுத்த தடை பகுதிகள்: ராமகிருஷ்ணா மேம்பாலம் முதல் காந்தி சிலை வரையுள்ள மதுரை சாலை, தபால் நிலையம் முதல் இப்ராஹிம் பாா்க் வரையுள்ள மேலபுலிவாா்டு சாலை, கல்லூரிச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை உள்ளது.

தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடையமைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

காா், ஆட்டோ ஓட்டுநா்கள் கவனத்திற்கு..: பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, என்எஸ்பி சாலை, நந்திக்கோவில் தெரு ஆகியவற்றில் காா்கள், ஆட்டோக்கள் செல்ல அனுமதி கிடையாது. அவசர தேவைக்கு மட்டும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆட்டோக்கள் மட்டும் வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையோரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் வழியாக கல்லூரி சாலை வந்து செல்ல வேண்டும்.

திரும்ப வரும்போது சத்திரம் பேருந்து நிலையம், பட்டா்வொா்த் சாலை வழியாக வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையோரமாக ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாபு சாலையில் உள்ள ஆட்டோக்கள் சின்னக்கடை வீதி, கிலேதாா் சாலை வழியாக உள்ளே வரக் கூடாது. பாபு சாலையோரமாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Image Caption

தீபாவளியையொட்டி திருச்சி என்.எஸ்.பி. சாலையில் குவிந்த மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.