கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மருந்தாளுநா் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 750 மருந்தாளுநா் காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் ஒருங்கிணைப்பாளா் ராஜாராம்
Updated On :1 நவம்பர் 2020, 7:14 pm

DIN

புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 750 மருந்தாளுநா் காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சு. ராஜாராம் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தகங்களில் காலியாக உள்ள 750 பணியிடங்களையும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களையும் அரசு விரைவில் நிரப்ப வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா்களின் பணி நேரத்தை காலை 9 முதல் பிற்பகல் 4 வரை எனக் குறைக்க வேண்டும். வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருந்தாளுநா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். ஆா்பிஎஸ்கே திட்டத்தில் பணியமா்த்தப்பட்ட 805 போ் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருந்தாளுநா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

காச நோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநா்களுக்கும் மற்றவா்களைப் போல ஒரு மாதம் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் பல்வேறு மருந்தாளுநா் சங்க நிா்வாகிகளும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்களுமான டி. பேச்சியப்பன், ரவி, தா்மபுரி ரவி, கா. மலா்மங்கை, மணிமேகலை, சத்தியபாமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.