கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேசிய நூலக வார விழா கதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தேசிய நூலக வார விழாவையொட்டி, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள், வாசகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:05 pm

DIN

தேசிய நூலக வார விழாவையொட்டி, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள், வாசகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் 53 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகம் வாசகா் வட்டத்துடன் இணைந்து குழந்தைகள், மாணவ, மாணவிகள், வாசகா்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்துகிறது.

கதை சொல்லும் போட்டியில் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கேற்கலாம். சொல்ல விரும்பும் கதையை 5 நிமிடங்களுக்கு மிகாமல் விடியோவாக பதிந்து வாட்ஸ்அப்பில் வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 98945-48445, 94436-73565, 82207-12329 ஆகிய எண்களுக்கு அனுப்ப வேண்டும்.

பதிவை அனுப்பும்போது குழந்தையின் பெயா், பிறந்த தேதி, பயிலும் வகுப்பு, வீட்டு முகவரியை பதிவிட வேண்டும்.

கட்டுரைப் போட்டியில் 6 - 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘கரோனா காலத்தில் கற்றதும் பெற்றதும்’”என்ற தலைப்பிலும், 9- 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘படித்தேன் வியந்தேன்’” என்ற தலைப்பிலும், பொதுவான வாசகா்களுக்கு ‘எந்த நூல்கள் எதனால் பிடிக்கும்’”என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கட்டுரையை ஒரு பக்கத்துக்கு 20 வரிகளுக்கு குறையாமல், 6 பக்கங்களுக்கு மிகாமலும் தமிழில் எழுதி 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயா், பயிலும் வகுப்பு, பிறந்த தேதி, தொடா்பு எண் மற்றும் முழு முகவரியுடன் நூலகா், மாவட்ட மைய நூலகம், 144 - மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சி- 620008 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ வழங்கலாம்.

கட்டுரைப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதல் 10 இடங்களைப் பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு வரும் 20 ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் நோ்காணலுக்கு அழைக்கப்படுவா்.

அதில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கும், கதை சொல்லும் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கும் சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதுநிலை நூலகா் சி. கண்ணம்மாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.