ரயில்வே ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
திருச்சியில் ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சியில் ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (59), ரயில்வே ஊழியா். கடந்த 4 மாதங்களுக்கு முன் திருவெறும்பூா் வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்பு பணி மேற்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 10 நாள்களுக்கு முன் வீடு திரும்பினாா்.
தனது சொந்தத் தேவைகளை கூட சுயமாக செய்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...