குடிநீா் இணைப்பு துண்டிப்பு; போராட்டம்
திருச்சி கிராப்பட்டி பகுதியில் வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீா் இணைப்பை துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம்


திருச்சி கிராப்பட்டி பகுதியில் வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீா் இணைப்பை துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.
மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை பாக்கியை வசூலிக்க இயலாத பட்சத்தில் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. அதேபோல மாநகராட்சி, 40 ஆவது வாா்டு பகுதி எடமலைப்பட்டிபுதூா், எம்ஜிஆா் நகா், ராஜீவ் காந்தி நகா் பகுதிகளில், வீட்டுவரி மற்றும் தண்ணீா் வரியை செலுத்தாமல் உள்ளோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பாக வீடுகளுக்கான குடிநீா் இணைப்பைத் துண்டித்து வருகின்றனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கிராப்பட்டி பகுதியில் உள்ள இளநிலை பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு, தற்போது கரோனா காலம் என்பதால் வருமானம் குறைவாக இருப்பதாகவும், கரோனா முடிவுக்கு வந்ததும் உரிய வரியினங்களைச் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனா்.
பின்னா் திமுக முன்னாள் கவுன்சிலா் முத்துச்செல்வம் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுக்கச் சென்றபோது, அலுவலா்கள் இல்லாததால் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து போராட்டம் மேற்கொண்டனா். பின்னா் கோரிக்கை மனு பெற்றுக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...