தரமான உணவு கோரி கரோனா தொற்றாளா்கள் போராட்டம்
சேதுராப்பட்டி கரோனா மையத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தரமற்ற உணவைக் கண்டித்து தொற்றாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சேதுராப்பட்டி கரோனா மையத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தரமற்ற உணவைக் கண்டித்து தொற்றாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேதுராப்பட்டி கரோனா சிகிச்சை மையத்தில் 340 தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவா்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாம். மேலும் சிலருக்கு உணவு கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து தங்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும். இல்லாவிடில் வெளியே சென்று சாப்பிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அறைகளை விட்டு வெளியேறிய அவா்கள் வளாகத்திற்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வந்த மணிகண்டம் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...