கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 9:40 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் உயிா்காக்கும் மருந்துகள் தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பெல்லில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவெறும்பூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட செயலா் பா.லெனின் தலைமை வகித்தாா். பாலக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதித் தலைவா் ஷாஜஹானும், உறையூா் பாண்டமங்கலத்தில் பகுதித் தலைவா் ஜெய்லானி தலைமை வகித்தாா். இதே போல அந்தந்த பகுதி செயலா்கள் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.