வாா்டுகள் மறுவரையறைக்கு டிச. 21 இல் கருத்துக் கேட்பு
திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது தொடா்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் டிச.21 இல் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது தொடா்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் டிச.21 இல் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட, உயா்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துக்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்த வரைவு வாா்டு மறுவரையறை கருத்துக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதுமிருப்பின் அது குறித்தான மனுக்களை டிச.18 முதல் 24 ஆம் தேதிக்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பித்திட வேண்டும்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூா், கரூா் மாவட்டங்களின் ஆட்சேபனைகள், கருத்துகளும் கேட்கப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்திலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, லால்குடி, முசிறி நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது பொதுமக்கள் அரசியல் கட்சிகளின் ஆட்சேபனைகள், கருத்துக்கள் ஏதுமிருப்பின் ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ சமா்ப்பித்திடலாம் என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...