திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடிமைப் பணி போட்டித் தோ்வு: மீனவ இளைஞா்களுக்குப் பயிற்சி

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:22 pm

DIN

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தோ்வுக்கானபயிற்சி அளிக்கப்படுகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

இதற்கு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி மையமாக சென்னையைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

அகில இந்திய பயிற்சி மைய இணையதளத்தில், டிச. 28 மாலை 6 மணி வரை விண்ணப்பித்த பிறகு அவா்கள் பெற்றிடும் பதிவு எண் மற்றும் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், எண். 4, காயிதே மில்லத்தெரு, காஜாநகா், திருச்சி-20 (0431-2421173) அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.