/

ரூ.15 லட்சம் மதிப்பு நிலம் அபகரிப்பு: ஒருவா் கைது

ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:51 am

DIN

ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமப்பகுதியில் குந்தாளத்தம்மாளுக்குச் சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிவாஜி, ராஜா ஆகியோா் போலியான நபா்களை வைத்து அபகரித்தனா்.

இதுகுறித்து நில உரிமையாளா் அளித்த புகாரின் பேரில், நில அபகரிப்புத் தடுப்புத் தனிப்பிரிவு போலீஸாா் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.