ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சமயபுரம் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

News image
சமயபுரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை
Updated On :9 ஜனவரி 2021, 6:52 pm

DIN

லால்குடி: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சமயபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கரில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகளின் விற்பனை நடைபெற்றது. வாரந்தோறும் இச் சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரையே ஆடுகள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.