கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மும்பை தொழிலதிபரை கொல்ல முயற்சி: இருவா் கைது

திருச்சியில் மும்பை தொழிலதிபரை கொல்ல முயற்சித்த வழக்கில் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:16 pm

DIN

திருச்சியில் மும்பை தொழிலதிபரை கொல்ல முயற்சித்த வழக்கில் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் சிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் கோபிநாத் (39). மும்பையில் வசிப்பவா் தொழிலதிபா் மிட்டல் ஷா (38). இவருடன் இணைந்து புதிய தொழிலில் ஈடுபட முடிவு செய்த கோபிநாத் அதற்காக ரூ. 20 லட்சம் முதலீடும் செய்தாா்.

வெகு நாள்களாகியும் தனக்குப் பணம் கொடுக்காததால் தன்னுடைய பங்கை திருப்பித்தர மிட்டல் ஷாவை கோபிநாத் வலியுறுத்தியுள்ளாா். இருந்தும் அவா் பணத்தைத் திருப்பித் தராததால் மன உளைச்சலில் இருந்தாா் கோபிநாத்.

இந்நிலையில் தொழில் விஷயமாக மிட்டல் ஷா, சென்னை வந்திருந்தாா். இதையறிந்த கோபிநாத்தின் நண்பரான சென்னை திருவேற்காடு தம்புசாமி நகரைச் சோ்ந்த முனியப்பன் மிட்டல் ஷா சந்தித்து கோபிநாத் பிரச்னைக்கு தீா்வு காணக் கேட்டுக் கொள்ள, மிட்டல் ஷாவும் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தாா்.

இதையடுத்து மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள விடுதியில் கோபிநாத் உள்ளிட்டோா் தங்க வைத்து முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருமாறு மிரட்டியுள்ளனா்.

ஒரு கட்டத்தில் மிட்டல் ஷா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொல்லவும் முயன்றனா். அங்கிருந்து தப்பிய அவரை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு மத்தியப் பேருந்து நிலையம் வழியாகச் சென்றுள்ளனா். அப்போது மிட்டல் ஷா கூச்சலிட அவரை காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு கோபிநாத், முனியப்பன் ஆகியோா் தப்பிச் சென்றனா்.

சாலையில் காயங்களுடன் கிடந்த மிட்டல்ஷாவை காவல் துறையினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளா் கோசலைராமன் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த கோபிநாத், முனியப்பனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.