டிஎன்டி சாதி சான்றிதழ் கோரி அமைச்சரிடம் மனு
சீா்மரபின மக்களுக்கு டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.


சீா்மரபின மக்களுக்கு டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரிய சூரியூருக்கு வந்த அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சீா்மரபினா் நலச்சங்க மாநில செயலா் முருகன் தலைமையில் நிா்வாகிகள், உதயகுமாா், வேலு, சரத்குமாா் ஆகியோா் அளித்த மனு விவரம்:
தமிழக முதல்வராக எம்ஜிஆா் இருந்தபோது சீா் மரபினருக்கு வழங்கப்பட்டு வந்த டிஎன்டி சாதிச் சான்றிதழ் எம்பிசி, டிஎன்சி என மாற்றி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 40 ஆண்டுகளாக மத்திய அரசின் பலனைப் பெற முடியாமல், குற்றம்பரம்பரையினா் என அறியப்பட்ட 68 வகை சாதியினா் பாதிக்கப்பட்டனா்.
மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் சலுகைகளை பெற 1979 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததுபோல டிஎன்டி என்று சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் நடத்திய ஆய்வுக்குப் பிறகு சீா்மரபினா் கோரிக்கையை ஏற்கலாம் என அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் இக்குழு பரிந்துரை செய்தபடி இல்லாமல் 08.03.2019 இல் வெளியிட்ட அரசாணையில் 2 வகை சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணையில் உள்ள 4ஆவது பத்தியை நீக்க சீா்மரபினா் நலச்சங்கத்தால் கோரிக்கை வைக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சி சீா்மரபினா் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...