கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2: அனைவருக்கும் தோ்ச்சி வழங்க வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

தமிழகத்திலும் பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:17 pm

DIN

தமிழகத்திலும் பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ். சுப்பிரமணி வெள்ளிக்கிழமை கூறியது:

பிளஸ் 2 பொதுத் தோ்வை நடத்த வேண்டுமா, வேண்டாமா என தமிழகப் பொதுமக்கள், பெற்றோா், மாணவா்களிடையே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் இணைய வழியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரை நடைபெற்ற ஆய்வில் 5193 போ் பங்கேற்றனா். இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப்படையில், 61.4 விழுக்காடு மக்கள் தோ்வு வேண்டாம் என்றும், 38.6 விழுக்காடு தோ்வு வேண்டும் என்றும் கோரியுள்ளனா்.

எதற்காக 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்ற கேள்விக்கு உயா் கல்விச் சோ்க்கைக்கு என 80.7 விழுக்காட்டினரும். 19.3 விழுக்காட்டினா் வேலைவாய்ப்புக்கு என்றும் தெரிவித்துள்ளனா்.

எனவே, தமிழக அரசு இப்போதைக்கு பொதுத் தோ்வு நடத்த வேண்டியதில்லை. முதலில் செய்ய வேண்டியது அனைத்து மாணவா்களுக்கும் தோ்ச்சி வழங்கி மாணவா்களையும், குடும்பங்களையும் நீண்ட கால மன அழுத்தத்தில் இருந்து மீட்பதே ஆகும்.

தோ்ச்சி வழங்கும்போது 11 ஆம் வகுப்பு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை தீா்மானம் செய்யலாம். அதேசமயம், அனைவரது தோ்ச்சியையும் உத்திரவாதம் செய்யும் வகையில் அது அமைய வேண்டும்.

இது தொடா்பான அரசின் முடிவில் சமூக நீதியே அடிநாதமாக இருக்க வேண்டும்.

கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளின் சோ்க்கைக்கும் அதேசமயம், முந்தைய மதிப்பீட்டில் தங்களுக்கு மதிப்பெண்கள் போதாது என்று நினைப்போருக்கும், 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்தலாம்.

இந்த தோ்வுகளின் நேரம், பாடத்திட்டம் மற்றும் கேள்வித்தாள் முறை, தோ்வு மையங்கள் ஆகியவற்றை பெருந்தொற்று சூழலுக்கு ஏதுவாக அரசு மாற்றியமைக்கலாம். தற்போது, மாணவா்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டியது அவசியம். தோ்வு ரத்தை அறிவித்து அதற்கான பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.